காரைக்குடியில் 10 பைசாவுக்குப் பிரியாணி என அறிவிப்பைத் தொடர்ந்து, பிரியாணிக் கடைமுன்பு நூற்றுக்கணக்கான அசைவப் பிரியர்கள் குவிந்ததால், அப்பகுதியேத் திணறிப்போனது.
கடைத்திறப்பு விளம்பரம் (Store Advertising)
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா சிலை அருகே ராவுத்தர் கல்யாண வீட்டுப் பிரியாணி என்ற புதிய ஹோட்டல் தொடங்கப்பட்டது.
கடைத்திறப்பை முன்னிட்டு, தொடக்கவிழாச் சலுகையாக முதல் 200 நபர்களுக்கு பழைய 10 பைசா நாணயம் கொண்டு வந்தால் 1 பிரியாணிப் பொட்டலம் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது.
300 பேருக்கு பிரியாணி (Biryani for 300 people)
இதனையடுத்து கடை முன் பிரியாணிப் பிரியர்கள் குவியத்தொடங்கினர். முதலில் 10 பைசா நாணயம் கொண்டுவந்த 300 பேர்களுக்கு 1 பிரியாணி தாழ்ச்சா, தயிர் வெங்காயம், பாசிப்பருப்பு பாயாசம் அடங்கிய பார்சல் வழங்கப்பட்டது.
மற்றவர்கள் ஏமாற்றம் (Others are disappointed)
அதேநேரத்தில் 300 பேரை தாண்டி 10 பைசா நாணயம் கொண்டு வந்த பிரியாணி பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல நேர்ந்தது.இந்த உணவகத்தை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா,காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
10 பைசாப் பிரியாணி (10 bisap biryani)
இதேபோன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், புதிதாகப் பிரியாணி கடைகள் திறக்கப்படும் போது கடையை விளம்பரப்படுத்தும் வகையில் இவ்வாறு 10 பைசாப் பிரியாணி ஆஃபர் வழங்கப்படுவது சமீபகாலமாக வழக்கமாக உள்ளது.
விதிகள் காற்றில் (The rules are in the air)
இந்த ஆஃபரை கண்டு ஆர்வ கோளாறில் ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கடைகளின் முன் குவிந்தபோது, கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் கேள்விக்குறியாகின்றன. இதன் காரணமாக பிரியாணி கடைகளை அதிகாரிகள் இழுத்து மூடுவதும் தொடர் நிகழ்வாக உள்ளது.
மேலும் படிக்க...