Blogs

Monday, 22 August 2022 07:46 PM , by: Elavarse Sivakumar

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பிஜேபி பிரமுகர் ஒருவர், காரில் பெண் நண்பருடன் உல்லாசமாக இருந்தபோது, மனைவியிடம் சிக்கிக்கொண்டார். உடன்பிறப்புகளுடன் சேர்ந்து அவரை, மனைவி நெய்யப் புடைத்த சம்பவம், மற்றவர்ளுக்கு வேடிக்கையாக அமைந்தது.

சுற்றி வளைப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் புன்டல்கந்த் பகுதியின் பிஜேபி மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருபவர் மோஹித் சங்கர். இவர் அண்மையில் தமது பெண் நண்பருடன் காரில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.இந்த விஷயத்தை அறிந்த அவரது மனைவி, தமது தாய், சகோதரர்கள் சகிதம் சென்று பெண் நண்பருடன் இருந்த தமது கணவர் இருந்த காரை சுற்றி வளைத்துள்ளார்.

அடித்து நொறுக்கிய மனைவி

மனைவியை கண்டதும் திகைத்து காரிலேயே அமர்ந்திருந்த மோஹித் சங்கரை காரில் இருந்து கீழே இறக்கிய அவரது மனைவி ஆத்திரத்தில் தான் அணிந்த செருப்பை கழற்றி அடித்துள்ளார். இதேபோன்று அவருடன் இருந்த பெண்ணின் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜுஹி நகர போலீசார், அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை

அப்போது மோஹித் சங்கர், அவரது மனைவி, மோஹித் சங்கரின் கேர்ள் பிரண்டின் கணவர் ஆகியோர் தனித்தனியாக போலீசில் புகார் அளி்த்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவ்ர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)