Blogs

Thursday, 05 May 2022 09:28 PM , by: Elavarse Sivakumar

திருமணத்தின்போது, ஏதேனும் சீதனத்தைச் செய்வதாகக்கூறிவிட்டு, பின்னர் கொடுக்காமல் ஏமாற்றுவது வழக்கம். ஆனால், கணவன் சீதனமாகக் கொடுத்த நகை மற்றும் பணத்துடன் திருமணமான மறுநாளே மணமகள் எஸ்கேப்பான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அதுவும், கணவரையும், மாமியாரையும் வீட்டில் பூட்டி வைத்துவிட்டு மணமகள் எஸ்கேப் ஆன சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்தியாவில் தற்போது கல்யாண சீசன் துவங்கிவிட்டது. திருமணம் சீசன் வந்துவிட்டாலே திருமணத்தில் நடக்கும் கூத்துக்கள் குறித்த செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. இப்படியாக ஆக்ராவில் நடைபெற்ற ஒரு திருமணம் தற்போது ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியிருக்கிறது.

ஆக்ராவை அடுத்த ஷாஜன்ஜ் பகுதியைச் சேர்ந்த வெள்ளி நகை செய்யும் தொழிலாளி ஒருவர் திருமணத்திற்காகப் பெண் தேடினார். அப்போது ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் அமைந்தது. ஆனால், பெண் வீட்டார் ஏழை குடும்பம் என்பதால் தங்களால் திருமண செலவுகளை ஏற்க முடியாது என சொல்லியுள்ளனர். மாப்பிள்ளை வீட்டாரும் பெருந்தன்மையுடன் திருமணத்திற்கான மொத்த செலவுகளையும் தானே ஏற்று திருமணத்தை நடத்தினார். புது மாப்பிள்ளையும் பெண்ணும், மாப்பிள்ளை வீட்டிற்கு சென்ற தங்கள் வாழ்க்கையை துவங்கினர்.

அன்று நள்ளிரவு புதுப்பெண் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்த போது யாரும் பார்க்காத நேரத்தில் எழுந்து வீட்டிலிருந்த நகை, பணம் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வெளியேறினார். மன்னதாக மாப்பிள்ளையை மற்றும் மாமியார் தூங்கி கொண்டிருந்த அறையை பூட்டிவிட்டச் சென்றுள்ளார். நள்ளிரவில்  வீட்டை விட்டு வெளியேறியப் புதுப்பெண்,  வாட்ச் மேனிடம் ஏதேதோ பொய்யான காரணங்களை சொல்லிவிட்டுத் தப்பி சென்றுள்ளார்.

காலையில் மாப்பிள்ளையும் மாமியாரும் எழுந்து பார்த்தபோது தங்கள் அறைக்கதவு பூட்டியிருந்தது. மணமகள் இல்லாததும் தெரியவந்தது.
பின்னர் தன் உறவினர்களை அழைத்து கதவை உடைத்து திறந்துவெளியே வந்து பார்த்த போது புதுப்பெண் தப்பியோடியது தெரியவந்தது.

அதேநரத்தில் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் அந்த மணமகளுக்குப் போட்ட நகை பணம் எதுவும் காணவில்லை. பின்னர் வாட்ச் மேனிடம் விசாரித்த போது தான், அந்த பெண் தப்பிச்சென்றதையே அவர்கள் அறிந்துகொண்டனர்.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, எப்படியும் சிலர் ஏமாற்றத்தான் செய்வார்கள்.

மேலும் படிக்க...

டீக்கடைகளில் நீங்கள் அருந்தும் தேநீர் தரமானதா? கண்டுபிடிப்பது எப்படி?

ரத்தத்தில் சர்க்கரைக் கட்டுப்படுப்படுத்தும் வெண்டைக்காய் வாட்டர்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)