பி.எஸ்.என்.எல்., நிறுவனம், ‘4ஜி’ இணைப்பு வசதியை மட்டுமின்றி, ‘5ஜி’ என்.எஸ்.ஏ., இணைப்பு வசதியையும் சேர்த்து வழங்க இருப்பதாக, டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் உபாத்யாய் கூறியுள்ளார். மேலும், ஆகஸ்ட் 15ல், இந்த சேவைகள் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிவித்துள்ளார். பி.எஸ்.என்.எல்., தலைவர் பி.கே.புர்வாரும், ஆகஸ்ட் 15ல், பி.எஸ்.என்.எல்., ‘4ஜி’ சேவையை அறிமுகம் செய்வதில், பிரதமர் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனமும், வாடிக்கையாளர்களுக்காக 4ஜி இன்டர்நெட் சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடும் நாளன்று இந்த சேவையை தொடங்குவதற்கு BSNL நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
BSNL 4G:
நாட்டில் உள்ள பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ள நிலையில், BSNL நிறுவனம் இப்போது தான் 4ஜி சேவையில் அடியெடுத்து வைக்கிறது. ஆனால், இதில் சிறப்பம்சம் என்ன என்றால், பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் 4ஜி நெட்வொர்க் என்பது முற்றிலுமாக உள்நாட்டிலேயே தயார் செய்யப்படுவது ஆகும்.
4ஜி சேவைகளை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் நாடெங்கிலும் 1,00,000 டவர்களை கட்டமைத்து வருகிறது. ஸ்மார்ட் டவர்களுக்குப் பதிலாக, குறைந்த செலவிலான மோனோபோல்ஸ் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன என்றும், இது அதிக செயல்திறன் வாய்ந்தவை என்றும் மிஸ்ரா தெரிவித்தார். 4ஜி சேவையானது நாட்டின் பெருவாரியான முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்திய தொழில்நுட்பம் (Indian Technology)
முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தில் உருவான 4ஜி சேவையை பயன்படுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதலாவது சோதனை கால் ஒன்றை பயன்படுத்தியதாக இந்திய தொலைத்தொடர்பு துறை செயலாளர் கூறியிருந்தார். இதற்கிடையே, நாட்டின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளை ஏர்டெல், ஜியோ, வோடோஃபோன் போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் படிக்க