Blogs

Thursday, 05 March 2020 04:09 PM , by: Anitha Jegadeesan

பெரும்பாலான கரும்பு மற்றும் மக்காசோளம் விவசாயிகள் அறுவடைக்குப் பின்னர் மீதமுள்ள தோகைகளை தீயிட்டு எரித்து வருகின்றனர். இவ்வாறு செய்வதினால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. இது பற்றிய விழிப்புணா்வினை விவசாயிகளிடம் ஏற்படுத்த வேண்டுமென குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாய சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கடலூா் மாவட்டத்தில்  மங்களுர் பகுதியில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.  நிகழாண்டில் மட்டும் 43 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கேற்ற பருவ நிலை நிலவியதால் இவ்வாண்டு நல்ல மகசூல் கிடைத்துள்ளது.  அறுவடை தொடங்க உள்ள நிலையில், அதற்கு பிந்தைய மண்வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி. மக்காச்சோள சக்கைகளை தீ வைத்து எரிப்பதை தவிர்க்க வேண்டும் என தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தோகைகளை எரிப்பதனால் ஏற்படும் விளைவுகள்

  • மண்ணில் வாழும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மடிந்து விடும்.
  • தோகை எரிப்பதன் மூலம் மண்ணில் உள்ள கந்தக மற்றும் தழைச் சத்துக்கள் காற்றில் விரயமாகின்றன.
  • நிலத்தில் இரும்புச் சத்து குறைபாடு அதிகரிக்கிறது.
  • மறுதாம்பு பயிரில் எண்ணிக்கை குறைந்து, மகசூலும் குறைகிறது.

எனவே மக்காச்சோள விவசாயிகள் அறுவடை முடிந்தவுடன் அதன் கழிவுகளை அதே மண்ணில் கலக்குமாறு, மடக்கி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்  மண்ணில் அங்கக சத்து பெருகி மண்ணின் வளம் பாதுகாக்கப்படும்.  மண்ணில் இருக்கும் நுண்ணுயிா்கள் அதிகரிப்பதுடன் மண்ணில் நீா் பிடிப்பு தன்மையும் அதிகரித்து மகசூல் அதிகரிக்க செய்யும் என்றனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)