Blogs

Saturday, 06 November 2021 10:05 AM , by: Elavarse Sivakumar

புதிய தொழில் தொடங்க விரும்புபவரா நீங்கள்? அப்படித் திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான். இந்திய ரயில்வேயுடன் மேற்கொள்ளும் இந்த வியாபாரத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் பல ஆயிரங்களைச் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.

புதியத் தொழில் (New business)

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் அதாவது IRCTC மூலம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதிலிருந்து பல சேவைகளை பெறலாம்.

வீட்டில் இருந்தபடியே வருமானம் ஈட்ட ஐஆர்சிடிசி உடன் நீங்கள் ரயில்வே டிக்கெட் முகவராக இணைந்து பணியாற்றினால், மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். அதுவும் வீட்டில் இருந்தபடியே.

IRCTC ஏஜெண்ட்

ரயில்வே கவூண்டரில், ரயில்வே பணியாளர்கள், டிக்கெட் வழங்குவது போல், ஆன்லைனில் டிக்கெட்டுகளை வழங்க, நீங்கள் IRCTC இணையதளத்திற்குச் சென்று முகவராக ஆக விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராகி, வீட்டில் உட்கார்ந்து பெரியத் தொகையைச் சம்பாதிக்க முடியும்.

ஐஆர்சிடிசியின் அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு முகவராக நீங்கள் ஆகிவிட்டால், தட்கல், ஆர்ஏசி உள்ளிட்ட அனைத்து வகையான ரயில் டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, ​​ஏஜெண்டுகளுக்கு IRCTC இலிருந்து கணிசமான கமிஷன் கிடைக்கிறது.

கமிஷன்

நீங்கள் ஏஜெண்டாக, IRCTC யில் பயணிகளுக்கு ஏசி அல்லாத வகுப்பிற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 என்ற அளவிலும் , ஏசி வகுப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது டிக்கெட்டுக்கு ரூ.40 என்ற அளவிலும் கமிஷன் கிடைக்கும். இது தவிர, டிக்கெட் விலையில் ஒரு சதவிகிதமும் முகவருக்கு வழங்கப்படுகிறது. ஐஆர்சிடிசியின் ஏஜெண்டாக புக் செய்வதில் உள்ள மற்றொரு பெரிய நன்மை என்னவென்றால், இதில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு வரம்பு இல்லை.

சலுகைகள்

  • ஒரு மாதத்தில் எத்தனை டிக்கெட்டுகள் வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம்.

  • இது தவிர, தட்கல் டிக்கெட்டுகளை 15 நிமிடங்களில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது.

  • இதுமட்டுமின்றி, ஏஜென்டாக இருந்து ரயில்கள் தவிர விமான டிக்கெட்டுகளையும் முன்பதிவும் செய்யலாம்.

கட்டணம் (Fee)

IRCTC யின் முகவராக ஆக, சில வகை கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.
ஒரு வருடத்திற்கு ஐஆர்சிடிசி ஏஜெண்ட் ஆக பணியாற்ற கட்டணம் ரூ.3999 செலுத்த வேண்டும்.

நீங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முகவராக இருக்க விரும்பினால், நீங்கள் ரூ 6999 செலுத்த வேண்டும்.இது தவிர, முகவராக ஒரு மாதத்திற்கு 100 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஒரு டிக்கெட்டுக்கு 10 ரூபாயும், ஒரு மாதத்தில் 101 முதல் 300 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, ஒரு டிக்கெட்டுக்கு 8 ரூபாயும், 300 டிக்கெட்டுகளுக்கு மேல் முன்பதிவு செய்ய ஒரு டிக்கெட்டிற்கு ரூ.5 என்ற அளவில் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க...

கல்லறைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்த விரல்கள்! விபரம் உள்ளே!

சாவகாசமாக சுவரைச் சாப்பிடும் பெண்- அமெரிக்காவில் விநோதம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)