டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. இதை முன்னிட்டு, ஒரு பாட்டில் சரக்குக்கு 2 பாட்டில் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், குடிமகன்கள் மகிழ்ச்சியின் உறைந்தனர்.
சரக்கு வாங்க சலுகைகள் என அறிவித்தால் எந்த மது பிரியர்கள் தான் சும்மா இருப்பார்கள். இப்படி தான் டெல்லியில் மதுக்கடைகள் வெளியிட்ட அறிவிப்பால் மதுபிரியர்கள் திரண்டனர். சில நிமிடங்களில் மதுக்கடைகளில் திருவிழாக் கூட்டம் அலைமோதியது.
அரசு முடிவு
டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன. இந்த நிலையில் மது விற்பனை கடைகளுக்கான லைசென்சு பெற புதிய நடை முறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை(1-ந்தேதி) முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன.
அலைமோதியக் கூட்டம்
இதனால் தங்களிடம் இருக்கும் மதுபாட்டில்களை முழுவதுமாக விற்பனை செய்ய தனியார் மதுக்கடைகள் திட்டமிட்டன. இதற்காக ஒரு பாட்டில் சரக்கு வாங்குபவர்களுக்கு 2 பாட்டில் மது இலவசம் என்ற அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டது. அவ்வளவுதான் மது பிரியர்கள் போட்டி போட்டு கொண்டு பிரபலமான ஸ்டார் சிட்டி, மால் உள்ளிட்ட மது விற்பனை கடைகள் முன்பு திரண்டார்கள். இதனால் மது கடைகள் முன்பு கடுமையாக கூட்டம் அலை மோதியது.
சரக்கு
அவர்கள் தங்களுக்கு பிடித்தமான சரக்கு பாட்டில்கள் வாங்கி சென்றனர். மதுபிரியர்கள் குறிப்பிட்ட சில மதுபான வகைகளை வாங்கியதால் விரைவாக அந்த மதுபாட்டில்கள் விற்று தீர்ந்தது. அதுவும் குறிப்பாக பீர் வகைகள் அனைத்தும் சில மணி நேரங்களில் விற்று காலியானது. ஒரு
திருவிழா கூட்டம்
ஒரு பாட்டில் சரக்குக்கு 2 பாட்டில் கிடைத்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். ஆனால் பலருக்கு அதிர்ஷ்டம் கிடைக்காததால் அவர்கள் மதுபாட்டில்கள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்கள். இந்த சலுகை அறிவிப்பால் டெல்லி நகர வீதிகளில் உள்ள மதுபான கடைகளில் திருவிழா கூட்டம் போல் மதுப்பிரியர்கள் குவிந்தனர்.
மேலும் படிக்க...
தோட்டப் பணிகளில் ஈடுபட்டால், மன அழுத்தம் குறையும்- ஆய்வில் தகவல்!