Blogs

Saturday, 08 May 2021 11:50 AM , by: Elavarse Sivakumar

Credit : Pinterest

நாம் வாழும்போதும், பூமியைவிட்டுப் பிரிந்த பிறகும் நமக்குத் துணை நிற்பது பென்சன் என்னும் ஓய்வூதியம். அதிலும் குறிப்பாக, அரசு பணியில் இல்லாதாவர்களுக்கு, ஓய்வூதிய திட்டங்கள் வரப்பிரசாதமாகும்.

வயதான காலத்தில் (In old age)

ஏனெனில், நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்களின் வயதான காலத்தில் ஏற்படும் தேவைகளை எப்படி சமாளிப்பது என்ற கவலை இருக்கும்.

அப்படிக் கவலைப்படுபவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக வந்துள்ளதுதான் இந்த எல் ஐ சியின் (LIC) ஜீவன் சாந்தி திட்டம் (Jeevan Shanti Scheme).

சிறப்பம்சங்கள் (Highlights)

இந்த திட்டத்தில் நீங்கள் பெரும் தொகையை முதலீடு (Investment) செய்யலாம். இதில் உங்கள் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம்.

உடனடியாக ஓய்வூதியம் (Pension immediately)

உடனடியாக ஓய்வூதியம் பெறுதல் அல்லது 5, 10, 15 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தை பெறுதல் என பலவகை முதலீட்டு திட்டங்கள் உள்ளது. 5, 10, 15 அல்லது 20 வருடங்கள் கழித்து பென்ஷன் பெரும் திட்டங்களில், அதற்கேற்ப உங்கள் ஓய்வூதியத் தொகை அதிகமாக இருக்கும்.

ரூ.74,300 ஓய்வூதியம் (Pension of Rs.74,300)

இந்த திட்டத்தில் உங்களுக்கு 45 வயது என்ற நிலையில் 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.74,300 ஓய்வூதியம் கிடைக்கும்.

குடும்பத்தினருக்கும் பலன்கள் (Benefits to the family)

எல்.ஐ.சி ஜீவன் சாந்தி திட்டத்தை ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் வாங்கலாம். எல்.ஐ.சியின் ஜீவன் சாந்தி ஒரு விரிவான வருடாந்திர திட்டமாகும். இதில் பாலிஸி எடுத்த நபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பலன்கள் கிடைக்கும்.

தகுதி (Qualification)

எல்.ஐ.சியின் இந்த பாலிஸியை எந்தவொரு இந்தியக் குடிமகனும் வாங்கலாம்.
30 வயதுக்கு மேற்பட்டது மற்றும் 85 வயதுக்குக் குறைவாக உள்ள எவரும் எடுக்கலாம்.

கடன் வசதி (Credit facility)

இந்த பாலிசியின் அடிப்படையில் நீங்கள் கடனும் பெறலாம்.

பாலிசி தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், நீங்கள் 3 மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் சரண்டர் (Surrender) செய்யலாம். இதற்கு எந்த மருத்துவ ஆவணமும் தேவையில்லை.

மேலும் படிக்க...

தமிழ்நாடு வேளாண் கூட்டுறவு சங்கத்தில் எப்படி உறுப்பினராவது?

வெறும் 4% விவசாயிகளே வேளாண் பண்ணைய முறைகளைப் பின்பற்றுகிறார்கள்-ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

நாட்டு ரக விதைகள் வேண்டுமா? - இங்கே இலவசமாகக் கிடைக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)