Blogs

Friday, 13 December 2019 11:33 AM , by: Anitha Jegadeesan

தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி வரும் டிச. 17-ம் தேதி நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் காலை 10 மணி முதல் கறவை மாடு வளர்ப்பு  குறித்து பயிற்சி நடைபெற உள்ளது. இதில் கால்நடைகளுக்கு தோன்றும் நோய்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி, சினை கால பராமரிப்பு, முதலுதவி, மூலிகை மருத்துவம் போன்ற தகவல்கள், பண்ணையாளர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் கலந்துக் கொண்டு பயன் பெறலாம்.

பயிற்சியில் பங்கு பெற விரும்பும் அனைவரும் தங்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். மேலும் பயிற்சி குறித்த விவரங்களுக்கு 87547 48488, 04362-264665 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)