கொசாவோ நாட்டில், 33 வயது நபர் ஒருவரது வயிற்றில் செல்போன் இருந்ததுக் கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
விளையாட்டாக ருசிக்க (Taste the game)
பொதுவாக சிறு குழந்தைகள்தான் தன் வாயில் எதையாவது போட்டு ருசிக்க வேண்டும் என்றுக் கருதி, கையில் கிடைப்பதையொல்லாம் வால் போட்டு ருசிப்பதுடன், விழுங்கியும் விடுவர்.
பின்னர் இதைத் தெரிந்துகொண்ட பெற்றோர், மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்று, உயிரைக் காப்பாற்றிய சம்பவங்கள் உலக நாடுகளில் பல நிகழ்ந்துள்ளன.
33 வயது நபர் (33 year old person)
ஆனால் 33 வயது நபர் ஒருவர், செல்போனைத் தவறுதலாக விழுங்கியிருப்பது தற்போது நிகழ்ந்துள்ளது.
கோசாவா நாட்டில் ஓல்டு பிரிஸ்டினா எனும் பகுதியில் வசித்த 33 வயது நபர் ஓருவர் தவறுதலாக பழைய செல்போனை விழுங்கியுள்ளார். அவர் விழுங்கியது,2000 ம் ஆண்டு மாடல் பழைய நோக்கியா 3310 மாடல் மொபைல் போன்.
அறுவை சிகிச்சை (surgery)
விழுங்கிய சில நிமிடங்களில், வயிறு உப்பிப் புடைத்ததுடன், இதை தொடர்ந்து அந்த நபர் வயிற்று வலியால் துடித்து உள்ளார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.
எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி மூலம், செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து, பல மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலமாக அகற்றினர். இதன்மூலம் அவர் உயிர்பிழைத்தார்.
மேலும் மொபைலின் பேட்டரி குறித்து தான் மருத்துவர்கள் குழு, மிகவும் கவலைப்பட்டதாகவும், ஏனென்றால் அது மனிதனின் வயிற்றில் வெடிக்கக்கூடிய ஆபத்து இருந்தது என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க...
இந்தப் படிப்பில் சேர்ந்தால் லேப்- டாப் இலவசம்- மாணவர்கள் கவனத்திற்கு!
குளு குளு ஊட்டி மலைரயில் சேவை 6ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்- பயணிக்க ரெடியாகுங்கோ!