Blogs

Wednesday, 29 June 2022 08:38 AM , by: Elavarse Sivakumar

வேலூரில் சாலைபோடும் போது தெருவில் நின்ற டூவிலருடன் சேர்த்து சிமெண்ட் ரோட்டை போட்டுள்ளது அதிகாரிகளின் மெத்தனபோக்கை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறது.

அசத்தல் சாலை

வேலூர், வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிமெண்ட் சாலை

காளிகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவா. இவரது டூவிலரை  இரவுவேளையில்,  வழக்கம் போல் தங்களது கடைமுன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது தெருவில் புதியதாக சிமெண்ட் சாலை போடப்பட்டிருந்தது. அத்தோடு சேர்ந்து தெருவோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை சேர்த்தும் சாலை போடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து வாகனத்தை எடுக்க முயன்றார்.

வண்டியுடன் சேர்த்து

ஆனால் சிமெண்ட் கலவை இருகிவிட்டதால் டூவீலரை எடுக்கமுடியவில்லை. பின்னர் ஒருவழியாக போராடி சாலையை உடைத்து வண்டியை மீட்டுள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக சாலை போட்டுள்ளனர். அப்போது வண்டிக்கும் சேர்த்தே சாலை போட்டுள்ளனர்.

மெத்தனம்

தெருவில் உள்ள குப்பை, கற்கள், கட்டைகள் என எதையும் அகற்றாமல் சாலை போடுகிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் மக்கள் பணம் தான் வீணாகிறது என குமுறுகின்றனர். இனியாவது அதிகாரிகள் இவற்றை கண்காணித்து தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...

1 ரூபாய் நோட்டுக்கு ரூ.45,000 - வாங்க நீங்க ரெடியா?

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் - மீறினால் அபராதம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)