சிமெண்ட் சாலை போடும் அரசின் ஒப்பந்ததாரர்களின் அழிச்சாட்டியம் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது, குடிநீர் குழாயுடன் இணைத்து சிமெண்ட் சாலை போடப்பட்டதால், பெண்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் பெரும் இன்னலை எதிர்கொண்டுள்ளனர்.
குழாய் குடிநீர்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தெக்களூர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பைப் லைன் அமைத்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
சிமெண்ட் சாலை
இந்நிலையில், பழங்குடியினர் நலத்துறை சார்பில் தெக்களூர் இருளர் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
பெண்களுக்கு சிரமம்
வீடுகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சிமெண்ட் சாலை அமைக்கும் போது ஒப்பந்ததாரரின் அலட்சிய போக்கால் குடத்தில் தண்ணீர் பிடிக்க முடியாத வகையில் தெரு பொது குழாய் மூடி சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த தெருவில் வசிக்கும் பெண்கள் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் பிடிக்க முடியாததால், தண்ணீர் இல்லாமல், அவதியுறும் நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...