Blogs

Tuesday, 09 May 2023 08:28 AM , by: R. Balakrishnan

Insurance policy

இன்சூரன்ஸ் பாலிசிதாரர்கள் கடன் தொகை திருப்பி செலுத்துவதற்கான விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இன்சூரன்ஸ் துறைக்கான ஒழுங்குமுறை அமைப்பாக IRDAI செயல்பட்டு வருகிறது. இதன்படி நாட்டில் இன்சூரன்ஸ் தொழில் செய்வதற்கான உரிமம் வழங்குவது, விதிமுறைகளை உருவாக்குவது, ஒழுங்குபடுத்துவது போன்ற அதிகாரங்கள் IRDAI-க்கு இருக்கிறது.

இன்சூரன்ஸ் பாலிசி (Insurance Policy)

இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்து கடன் பெறும் நடைமுறை ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இதன்படி, ஒரு பயனாளி தனது இன்சூரன்ஸ் பாலிசியை செக்யூரிட்டியாக பயன்படுத்தி கடன் வாங்கி கொள்ளலாம்.

இப்படி இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்து பெறும் கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கு கிரெடிட் கார்டு வாயிலாக பரிவர்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இதற்கு தடை விதிக்க IRDAI முடிவு செய்துள்ளது.

இன்சூரன்ஸ் பாலிசிகளை வைத்து கடன் பெற்றவர்கள் கடனை திருப்பி செலுத்தும்போது கிரெடிட் கார்டு வாயிலான பரிவர்த்தனையை ஏற்று கொள்ள கூடாது என அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் IRDAI உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விதிமுறையை உடனடியாக அமல்படுத்தும்படி IRDAI தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இன்சூரன்ஸ் பாலிசியை வைத்து கடன் பெற்ற ஒரு நபர், அந்த கடனை திருப்பி செலுத்த கிரெடிட் கார்டு மூலம் மீண்டும் கடன் வாங்குகிறார். ஆக, ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் நடைமுறைக்கு தடை விதிக்க IRDAI இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்: மாவட்ட ஆட்சியரின் தரமான செயல்!

பழைய பென்சன் திட்டம் வேண்டுமா? உடனே இதைச் செய்யுங்கள்: மாநில அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)