CEO சாம் ஆல்ட்மேன் தலைமையிலான OpenAI, சனிக்கிழமையன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டது. AI சாட்போட் (chatbot), ChatGPT ஆகியவற்றை ஆண்ட்ராய்டு பயனர்கள் பயன்படுத்தும் வகையில் செயலியாக அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
இது AI யுத்தக்களம். உலகின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு AI (artificial intelligence) தொழில்நுட்பத்தில் கால் பதிக்க தொடங்கிவிட்டன. இந்நிலையில் சமீபத்தில் பல்வேறு புதிய அம்சங்களை கூகுளின் BARD AI தொழில்நுட்பத்தில் இணைத்தனர். இது chat Gpt-க்கு சவால் விடும் வகையில் அமைந்தது எனக் கருதப்பட்து.ட
கூகுள் தனது AI சாட்போட் BARD-னினை, ChatGPT க்கு போட்டியாக மார்ச் மாதம் வெளியிட்டது. ஆரம்பத்தில் chatGPT அளவிற்கு பெரிதும் பயனர்களை ஈர்க்காத நிலையில் புதிய அம்சங்களை இணைத்தது பயனர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றது. கூகுள் தனது தனித்துவமான AI சாட்போட் BARD-ஐ 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கச் செய்துள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் தான் குறி:
chatGPT யில் இருக்கும் மிகப்பெரிய பலவீனமாக கருதப்பட்டது பல பயனர்களுக்கு இன்றளவும் மொபைலில் பயன்படுத்துவதில் சிரமமும், சிக்கல்களும் உள்ளது என்பது தான். இந்த இடத்தில் தான் ஸ்கோர் செய்தது கூகுளின் BARD AI.
இதற்கு தீர்வுக் காணும் வகையில், சில மாதங்களுக்கு முன்பு ஐபோன் பயனர்கள் பயன்படுத்தும் வகையில் ChatGPT இலவச iOS செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முயற்சி வெற்றியடைந்த நிலையில், தற்போது Android வெர்சன்கான செயலியினை வெளியீட உள்ளது.
ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ChatGPT ஆப்ஸ், அதன் iOS செயலிக்கு இணையான அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொபைலில் இனி ChatGPT-யினை தங்கு தடையின்றி பயன்படுத்த இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு வெளியீடுக்கான துல்லியமான தேதியினை OpenAI இன்னும் வெளியிடவில்லை என்றாலும், ஆரம்ப வெளியீடானது உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைப்பதற்கு முன்பு அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஆண்ட்ராய்டுக்கான ChatGPT பயன்பாட்டைப் பெற ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஆர்வத்தை முன்கூட்டியே பதிவு செய்யலாம். கூகுள் ப்ளே ஸ்டோரில் "முன்பதிவு" விருப்பத்தை அழுத்துவதன் மூலம், ChatGPT செயலி தரவிறக்கம் செய்யும் வசதி வந்தவுடன் பயனர்கள் அறிவிப்பைப் பெறுவார்கள்.
கூடுதலாக, OpenAI நிறுவனம் ChatGPT-ல் மேற்கொண்ட சமீபத்திய புதுப்பித்தல் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் பயனர்கள் கடந்தகால உரையாடல்கள் மற்றும் chatbot உடனான தொடர்புகளை தற்போது எளிதாக அணுக இயலுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் காண்க:
உலகின் பணக்கார பிச்சைக்காரர்- மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?