Blogs

Saturday, 25 December 2021 03:54 PM , by: Elavarse Sivakumar

Credit : Brinkwire

கேஎஃப்சியில் சிக்கன் ஆர்டர் செய்திருந்த பெண் ஒருவருக்கு உணவு டெலிவரி செய்யப்பட்டபோது, மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

முழுத் தலை

KFC வாடிக்கையாளரான அந்தப் பெண், தனக்கு டெலிவரி செய்யப்பட்ட ஹாட் விங்ஸ் உணவில் முழு கோழித் தலை இருந்ததைக் கண்டு அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை! அவரை மட்டுமல்ல, இதைத் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு உணவுப் பிரியர்களுக்கும் அதிர்ச்சியே மிஞ்சுகிறது.

இன்ஸ்டாகிராமில் (On Instagram)

ஜஸ்ட் ஈட் (Just Eat)இல், இரண்டு நட்சத்திர மதிப்பைக் கொடுத்த அந்தப் பெண், “எனது சூடான விங்ஸ் உணவில் கோழியின் வறுபட்ட தலை இருந்ததைக் கண்டேன். உடனே உணவைத் தூக்கி வீசிவிட்டேன் ” என்று எழுதியுள்ளார். இந்த செய்தியை அவர், இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார்.

கேப்ரியல் என்ற KFC வாடிக்கையாளர், தென்கிழக்கு லண்டனின் Twickenham இல் அமைந்துள்ள KFC Feltham இலிருந்து ஹாட் விங்ஸ் ஆர்டர் செய்ததாகக் கூறப்படுகிறது.

புதிதாகத் தயாரிக்கிறோம்

அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட உணவில் கோழியில் தலை இருந்தது (Food Delivery) இங்கிலாந்து சமூக ஊடகங்களில் பரவலாக அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. உண்மையான கோழிக்கறியை வழங்குவதாக பெருமைப்படும் கே.எஃப்.சி, "எங்கள் உணவகங்களில் அனைத்தையும் புதிதாகத் தயாரிக்கிறோம்" என்றும் கூறுகிறது.

சப்ளையர்கள், கூட்டாளர்கள் மற்றும் குழுக்களுடன் தாங்கள் வைத்திருக்கும் கடுமையான செயல்முறைகள் மற்றும் கண்காணிப்பில் சிறிய தவறு ஏற்பட்டிருப்பதை இது தெளிவாக காட்டுகிறது என்றும்ம் கே.எஃப்.சி ஒப்புக்கொண்டது.

2 நட்சத்திரம் (2 Star)

இந்த சம்பவத்திற்கு பிறகும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் கேப்ரியல் இரண்டு நட்சத்திரம் கொடுத்திருப்பது அவரது தாராள உள்ளத்தை காடுவதாக நன்றி தெரிவித்திருக்கும் பிரபல உணவுச் சங்கிலி நிறுவனமான KFC, அவரை தொடர்பு கொண்டதாகவும் கூறுகிறது.

கே.எஃப்.சி நம்பிக்கை (KFC Hope)

அவரையும் அவரது குடும்பத்தினரையும், தங்கள் ரெஸ்டாரண்டுக்கு வந்து சமையலறைக் குழுவினரை சந்திக்கும்படி அழைப்பு விடுத்திருப்பதாகவும், மீண்டும் தங்களிடம் ஆர்டர் செய்வார்கள் என்றும் கே.எஃப்.சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. எனவே ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ணும் உணவுப் பிரியர்களே உஷார்.

மேலும் படிக்க...

குளிர்காலத்தில் மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

வலிப்பு நோய்க்கு நிரந்தர தீர்வு: மருத்துவர் விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)