ஹூண்டாய் மோட்டார் இந்தியா’ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு, சுற்றுச் சூழலுக்கு இயைந்த வகையிலான பல்வேறு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தண்ணீரை பயன்படுத்தாமல் காரை சுத்தப்படுத்தும் வகையில், ‘சேவ் வாட்டர் சேலஞ்ச் (Save watte chalange) எனும் திட்டத்தை அறிமுகம், செய்துள்ளது.
நீரின்றி சுத்தம் (Clean without water)
இதன்படி, நீரைப் பயன்படுத்தாமல் ‘டிரை வாஷ்’ (Dry wash) முறையில், வாகனங்கள் சுத்தம் செய்யப்படும் என இந்நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த திட்டம், இம்மாதம் 22ம் தேதியிலிருந்து, டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. இக்காலகட்டத்தில் ஹூண்டாய் வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் அனைத்து சர்வீஸ் நிலையங்களிலும் தங்கள் வாகனத்தை, நீரின்றி சுத்தம் செய்து கொள்ளலாம்.
டிரை வாஸ் (Dry Wash)
இது குறித்து, இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் தருண் கார்க் கூறியதாவது: கடந்த 4 ஆண்டு களில், 42 லட்சம் ஹூண்டாய் வாடிக்கையாளர்கள், ஏற்கனவே இத்தகைய டிரை வாஷ் எனும் முறையை பயன்படுத்தி உள்ளனர்.
இதனால், கிட்டத்தட்ட 50.4 கோடி லிட்டர் நீர் வீணாகாமல் சேமிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி; நிறுவனம், சுற்றுப்புற சூழ்நிலைக்கு இயைந்த வகையில் காகிதமில்லா செயல்பாடு, எல்.இ.டி., லைட்டிங் என பல்வேறு வகையான முன்முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க
வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்!
மலிவான விலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: டார்வின் நிறுவனம் அறிமுகம்!