கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 30வது முறையாக, துாத்துக்குடி யாசகர் ஒருவர், பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்கி மற்றவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இதுவரை அவர் 3 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார்.
கொரோனா அலை (Corona wave)
கொரோனா அலை ஓரளவுக்கு ஓய்ந்திருப்பதாகக் கருதப்பட்டாலும், புதிய வடிவில் 2-வது அலை உலக நாடுகளைப் பதம்பார்த்துக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்தியாவில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், புதிய வடிவிலான கொரோதொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.இதுஒருபுறம் என்றால், கொரோனாத் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரம் காட்டிவருகின்றன.
மக்கள் நிதி (People's Finance)
இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் தாராளமாக முன்வந்து நன்கொடை வாரி வழங்கி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாக யாசகர் ஒருர் 30-வது முறையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி வழங்கியுள்ளனர்.
30-வது முறை (30th time)
துாத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன். இவர் கொரோனா காலகட்டத்தில் பிச்சை எடுத்த பணத்தில் உணவு செலவு போக மீதமுள்ளதை ரூ.10 ஆயிரம் வீதம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் நிவாரண நிதியாக 28 முறை வழங்கினார். சில நாட்களுக்கு முன் சிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்கள், காயமுற்றவர்களுக்கு நிவாரணமாக வழங்க ரூ.10ஆயிரம் நிதி வழங்கினார்.
இந்நிலையில், தற்போது மேலும் ரூ.10 ஆயிரம் நிதியை 30வது முறையாக மதுரையில் ஆட்சியர் அன்பழகனிடம் வழங்கினார். இதுவரை அவர் ரூ.3 லட்சம் வழங்கியிருக்கிறார். இவரது சேவையப் பாராட்டி ஏற்கனவே சுதந்திர தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
நாயைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.3.6 கோடி பரிசு!
ஒரு கப் தேநீர் 1,000 ரூபாய் - இங்கில்லை, கொல்கத்தாவில்!
4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்- தேர்தல் கண்காணிப்புக் குழு அதிரடி!