கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அமெரிக்காவை சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் (Delta Airlines)நிறுவனம் அறிவித்துள்ளது.
நோய்த் தொற்று (Infection)
கொரோனா வைரஸ் தொற்று, பரவ ஆரம்பித்தது முதலே பாமர மக்களுக்கு பலவிதப் பாதிப்புகளை வாரி வழங்கி வருகிறது. நோய்த் தொற்று, உயிர்பலி என உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இதுஒருபுறம் என்றால், நோய் பரவாமல் தடுப்பதற்காக அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியதால், வேலைக்குச் செல்லமுடியாமல், ஊதியம் இல்லாமல் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
பல தடுப்பூசிகள் (Many vaccines)
அதேநேரத்தில் கொரோனா பரவலைத் தடுக்க உலக ஆராய்ச்சியாளர்களின் தீவிர முயற்சியில் பல தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளன. தகுதியுள்ள ஒவ்வொரு நபர்களும் தடுப்பூசி செலுத்தினால்தான் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டுவர முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து பலரும் விரும்பி தடுப்பூசி செலுத்திவரும் நிலையில், சிலர் மட்டும் தடுப்பூசி செலுத்துவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனையடுத்து, சில நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தாத தங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றன.
ரூ.37 லட்சம் (Rs. 37 lakh)
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களின் ஊதியத்தில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
கொரோனா பாதித்த ஊழியர்களின் சிகிச்சைக்கு தலா 37 லட்சம் ரூபாய் செலவாகிறது என்பதால், இந்த அபராதம் விதிக்கப்படுவதாக டெல்டா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சி தந்த அபராதம் (Shocking fine)
நோய் பதம்பார்த்தது ஒருபுறம் என்றால், தற்போது அபராதத்தையும் சந்திக்க வேண்டியிருப்பது, தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...
தடுப்பூசியை கலந்து போடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு!
கொரோனா தடுப்பூசி: 48 கோடி டோஸ் செலுத்தி இந்தியா புதிய சாதனை!