மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 December, 2019 11:44 AM IST

தமிழகத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அவ்வப்போது விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் கால்நடை வளர்ப்பு,  பராமரிப்பு,  தீவன மேலாண்மை குறித்த தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் இலவசப் பயிற்சி முகாம்கள் போன்றவற்றை நடத்தி வருகிறது. அந்த வகையில் வரும் 19, 20ம் (நாளை, மறுநாள்) தேதிகளில் பெரம்பலூரில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

பெரம்பலூரில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சியினை வழங்க உள்ளது. சிறப்பம்சமாக நாட்டுக்கோழி இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வளர்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, கோழிக்குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சி  முகாமில் விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள் காலை 10 மணிக்கு மேல் 5 மணிக்குள் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு தங்களின் வரவை பதிவு செய்ய வேண்டும். தொடர்ப்பு கொள்ள நினைப்பவர்கள் 93853 07022 எண்ணில்  தொடர்பு கொள்ளலாம் என கால்நடை மருத்துவப்பல்கலைக் கழகம்  தெரிவித்துள்ளது.

English Summary: Desi Country Chicken Camp held at Veterinary University Training and Research Centre, Perambalur
Published on: 18 December 2019, 11:44 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now