பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 February, 2022 11:19 AM IST

பணக்காரப் பெண்களுடன் டேட்டிங் சென்று உல்லாசத்தை அனுபவிப்பதுடன், பணமும் ஈட்டலாம் என்று ஆசை காட்டி, 72 வயது முதியவரை ஒரு கும்பல் மோசம் செய்துள்ளது. டேட்டிங் ஆசையில் அந்த முதியவர் சுமார் 60 லட்சம் ரூபாயை இழந்துள்ளார் என்பதுதான், மோசடியின் உச்சம்.

மகாராஷ்டிர மாநிலத்தின் புனே நகரில் 76 வயது முதியவர் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி, கடந்த ஆண்டு செய்தித்தாளில் விளம்பரம் ஒன்று வந்தது. அதில், பிரெண்ட்ஷிப் கிளப் என்ற பெயரிலான விளம்பர செய்தியில், தொலைப்பேசி எண் இருந்துள்ளது. அதனைத் தொடர்பு கொண்டு பேசிய முதியவருக்கு, அதிக வசதி படைத்த பணக்கார பெண்களுடன் டேட்டிங் சென்று பதிலுக்கு பணம் ஈட்டலாம் என பதிலளிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக முதியவர், கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை ரூ.60 லட்சம் வரை பணம் அனுப்பியுள்ளார். உறுப்பினர் கட்டணம், பாதுகாப்புக்காக முன் வைப்பு தொகை இப்படி, பலக் காரணங்களைக் கூறி இந்த முதியவரிடம் இருந்து பணத்தைப் பறித்துள்ளது மர்ம கும்பல்.


இதை உணராதத் தாத்தா, டேட்டிங் ஆசையில், குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். கடைசியில் மோசடி செய்திருப்பதை உணர்ந்த அந்த முதியவர், போலீசைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், 28 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது வங்கி கணக்கே பணபரிமாற்றத்திற்கு பயன்பட்டு உள்ளது.

தொடர் விசாரணையில் அனூப் மனோர் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு சிலரும் ஈடுபட்டு இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் போலீசார் அவரிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க...

மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டம் நீட்டிப்பு- SBI அறிவிப்பு!

அதிகாலையில் பற்றி எரிந்த 5 ஏக்கர் கரும்புத் தோட்டம்!

English Summary: Desire comes at the age of 70- An old man who lost Rs 60 lakh by wanting for dating!
Published on: 21 February 2022, 11:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now