Blogs

Friday, 03 April 2020 02:56 PM , by: Anitha Jegadeesan

தர்மபுரி மாவட்டம், அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் இணைந்து நடமாடும் காய்கறி கடையை துவங்கி உள்ளனர்.  காய்கறிகள் தரமாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கரோனா ஊரடங்கு உத்தரவு போன்ற காரணங்களினால் அத்தியாவிசிய பொருட்களான காய்கறிகள், மளிகை சாமான்கள், பால், மருந்து பொருட்கள், கிருமி நாசினி, இறைச்சி உள்ளிட்ட  கடைகளுக்கு மட்டும்  செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்கபடுவதாக பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் இதை தடுக்கும் வகையில் அங்குள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பிரதிநிதிகள் இணைந்து பொதுமக்களுக்காக நடமாடும் கூட்டுறவு காய்கறிக்கடையை  துவங்க உள்ளனர். இதன் மூலம் குறைவான விலையில் தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அன்றாடம் சமையலுக்கு தேவைப்படும்  தக்காளி, சின்ன வெங்காயம்/ பெரிய வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், எலுமிச்சை, கத்திரி, வெண்டை ,முட்டை கோஸ், முள்ளங்கி, கேரட், பீட்ருட், பீன்ஸ் என 20ற்கும் மேற்பட்ட காய்கறிகள் விற்கப்படுகிறது. வீடுகளுக்கே காய்கறிகள் வருவதால் இந்த நடமாடும் காய்கறிக் கடைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  பொது மக்களும் சமூக அக்கறையுடன், போதிய இடைவெளியில், வரிசையாக நின்று தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் என கூட்டுறவு விற்பனை சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)