தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் விவசாயகளின் வசதிக்காக மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றும் பொருட்டு வேளாண்துறை சார்பில், நடமாடும் விற்பனை மையங்கள் செயல் பட்டு வருகின்றன.
நடமாடும் விற்பனை நிலையம்
தேனி மாவட்டத்தில் நடமாடும் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலைய சேவையை மாவட்ட நிர்வாகம் துவங்கி உள்ளது. அனைத்து இடங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மட்டுமே செயல்பட அரசு அனுமதித்துள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் பணி தடையின்றி நடைபெற அவர்களுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் நடமாடும் விற்பனை நிலையம் மூலம் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயிகள் நடமாடும் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை நிலைய சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தற்போது போதிய அளவு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் உள்ளன எனவும், விவசாயிகள் இந்த விற்பனை நிலையங்களில் இடுபொருளை வாங்கும் போது தங்களின் ஆதார் எண்ணை சமர்ப்பித்து, தங்களுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்தலாம். அவர்கள் வாங்கும் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு விற்பனை முனைய கருவி மூலம் ரசீது வழங்கப்படுகிறது.