நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 July, 2022 11:19 AM IST

தமிழக மாவட்ட நீதிமன்றங்களில் பணிபுரிய 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அருமையான வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மொத்தம் 1412 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், தகுதி உடையவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1412 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

பணிகள்

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பதவிகள்

நகல் பரிசோதகர் (Examiner)
நகல் வாசிப்பாளர் (Reader)
முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff)
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)
கட்டளை பணியாளர் (Process Server)
கட்டளை எழுத்தர் (Process Writer)
ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator)
மின் தூக்கி இயக்குபவர் (Lift Operator)
ஓட்டுனர் (Driver)

மொத்த காலியிடங்கள்

1412

சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் நீதிமன்ற இணையத்தளப் பக்கம் மூலமாக காலியிட விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம்.

கல்வித் தகுதி (Educational Qualification)

  • அனைத்து பணியிடங்களுக்கும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • ஒளிப்பட நகல் எடுப்பவர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கு முன் அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி(Age Limit)

01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST 5 ஆண்டுகளும், MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் (Salary)

நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர், ஓட்டுனர் பணியிடங்களுக்கு ரூ. 19,500 – 71,900
இளநிலை கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், கட்டளை பணியாளர் ரூ. 19,000 – 69,900
ஒளிப்பட நகல் எடுப்பவர் ரூ. 16,600 – 60,800
மின் தூக்கி இயக்குபவர் ரூ. 15,900 – 58,500

தேர்வு முறை (Selection)

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும்.

தேர்வுக் கட்டணம் (Fee)

ரூ. 550, இருப்பினும் SC, SC(A), ST, மாற்று திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://jrchcm2022.onlineregistrationform.org/MHCMP2022/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி (Last date)

22.08.2022

மேலும் படிக்க...

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயமும் அடிப்படை - பிரதமர் மோடி!

English Summary: District Court Employment-Eligibility 10th Class!
Published on: 30 July 2022, 11:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now