Blogs

Thursday, 24 March 2022 08:01 PM , by: Elavarse Sivakumar

தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துவரும் நிலையில் தங்கம் வாங்க இனி நகைக்கடைக்கு போகவே வேண்டாம். ஏனெனில், ஏடிஎம் மூலமாக தங்கம் வாங்கும் வசதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் என்பது எப்போதுமே இந்தியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒரு பொருளாக இருந்துவருகிறது. ஏனெனில் தங்கம் நமக்கு எப்போதுமேத் தனி கவுரவத்தைக் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.

இது விலை மதிப்பிட முடியாத உலோகம் என்பதைக் காட்டிலும், எந்தக் காலத்திலும் அதிக லாபம் தரும் முதலீடாகும். அதிலும் கடந்த சில ஆண்டுகளாகத் தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவதால் அதில் செய்யும் முதலீட்டுக்கு லாபம் அதிகமாகக் கிடைக்கிறது. தங்கத்தைப் பொதுவாக நாம் நகைக் கடைகளில்தான் வாங்குவோம். நகை வாங்குவதற்காக நகைக் கடைகளில் ஏறி இறங்கி வரிசையில் காத்துக்கிடந்து சிரமப்படுபவர்கள் ஏராளம்.

இந்நிலையில் ஏடிஎம்மில் பணம் எடுப்பது போல, ஏடிஎம் மெஷினில் தங்கத்தை எடுக்கும் வசதி இப்போது முதன்முதலாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கோல்ட் சிக்கா லிமிட்டெட் நிறுவனம் சார்பாக இந்த ATM அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ATMமில் தங்கத்தை வாங்கவும் விற்கவும் செய்யலாம். வங்கி ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாகவே இந்த மெஷினில் தங்கத்தை வாங்க முடியும். இந்நிறுவனம் தரப்பிலிருந்தும் தங்கத்தை வாங்க பிரீ பெய்டு, போஸ்ட் பெய்டு கார்டுகள் வழங்கப்படுகின்றன.

3000 ATM

தங்கத்தை விநியோகிக்கும் ஏடிஎம் சேவைக்காக இந்த நிறுவனம் ட்ரூனிக்ஸ் டேட்டாவேர் எல்.எல்.பி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இது சென்னையைச் சேர்ந்த நிறுவனமாகும். இந்தியாவில் தங்கத்துக்கான ஏடிஎம் அறிமுகம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் சுமார் 3000 தங்க ஏடிஎம்களை நிறுவ இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க...

தூக்கத்தைத் தொலைத்தவரா நீங்கள்? இந்த ஒரே பானம் போதும்!

ஜில் ‘பீர்’ தட்டுப்பாடு- டாஸ்மாக்கில் அமோக விற்பனை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)