1885ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ரூ1. நாணயம் ஆன்லைனில் ரூ10 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைக் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்.
சேகரிக்கும் பழக்கம் (The habit of collecting)
நம் தாத்தா காலத்து நாணயங்களைப் பாசத்தோடு சேர்த்து வைக்கும் பழக்கம் நம்மில் சிலருக்கு இருக்கும்.அத்தகையப் பழக்கம் உள்ளவர்களுக்கு இப்போது ஜாக்பாட் அடிக்கப்போகிறது.
இவ்வாறு நாணயங்களை சேகரிப்பவர்கள், தங்களிடம் இல்லாத அரிய வகை நாணயங்களை ஆன்லைனில் யாராவது விற்றால் அதை விட அதிக மதிப்பைக் கொடுத்து வாங்கத் தயாராக இருக்கின்றனர்.
அதிக விலைக்கு விற்பனை (Selling at a higher price)
அவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு 20 பைசா, 50 பைசா, 25 பைசா, 1994ம் ஆண்டு வெளியான ரூ2 நாணயம், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை ஆன்லைனில் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, அரிய வகை 1.ரூபாய் நாணயம் ரூ.10 கோடிக்கு ஆன்லைனில் விற்பனையாகியுள்ளது.என்னது ரூ.10 கோடியா? என்று நீங்கள் சந்தேகிப்பது தெரிகிறது. இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு அப்படி என்ன சிறப்பு என்றால் இந்த நாணயம் 1885ம் ஆண்டு அச்சிடப்பட்டது. பிரிட்டிஷ் காலத்தில் அச்சிடப்பட்ட 1ரூபாய் நாணயம் தான் தற்போது விற்பனையாகியுள்ளது.
நாணயங்கள் விற்பனைக்கு (Coins for sale)
இவ்வாறு அதிகவிலைக்கு நாணயங்கள் விற்பனையாவது இது முதல் முறையல்ல இது போல பல முறை நடந்துள்ளது. இதே போல உங்களிடமும் அரிய வகை நாணயங்கள் இருந்தால் நீங்களும் ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
மேலும் படிக்க...
தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!
வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!