Blogs

Tuesday, 03 March 2020 04:02 PM , by: Anitha Jegadeesan

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே விவசாயிகள் சொட்டு நீர் பாசன முறையில் கத்தரிக்காய் சாகுபடி செய்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்மலை பகுதயில், நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வதை தவிர்த்து குறைந்த நீர்பாசனத்தில் வளரக் கூடிய காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். 

போதிய மழை இல்லாத காரணத்தினால், சொட்டு நீர் பாசனத்தில் நாள் தோறும் மக்களின் பயன்பாட்டில் அதிகம் உள்ள பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கத்தரி போன்றவற்றை சுழற்சி முறையில் பயிரிட்டு லாபம் ஈட்டி வருகின்றனர். விதைத்த 3வது மாதத்தில் இருந்து, தொடர்ந்து நான்கு மாதங்கள் வரை பலன் தரும் பச்சை மிளகாய்,  45 நாளில் பலன் தரக்கூடிய சின்ன வெங்காயம், ஆறு மாத பயிரான கத்தரிக்காய் போன்றவற்றை சாகுபடி செய்து அதிக வருவாய் மற்றும் மகசூல் பெற்று வருகின்றனர். ஏக்கருக்கு 10 டன்னுக்கு மேல் கத்தரி விளைகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.

சொட்டு நீர் பாசனம் மூலம் சாகுபடி செய்வதினால்,  ஒரு ஏக்கருக்கு 15 டன் வரை விளைச்சல் கிடைக்கும் என தெரிவித்தனர். மேலும் பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்தால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விளைச்சல் பெறலாம். கிணற்று பாசனம் நிறைந்த பிரான்மலை பகுதி விவசாயிகள் வறட்சியிலும் வருவாய் தரும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)