தேனி மாவட்ட விவசாயிகளுக்கு உரங்கள் மூலம் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது. இம்மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் விவசாயத்தையும், உபத்தொழிலாக கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆடு, மாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பு போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநில விவசாயிகள் தங்களின் ஏலம், மிளகு, காபி தோட்டங்களுக்கு இயற்கை உரங்களே அதிகளவு பயன்படுத்தபடுகிறது. இதனால் தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விலங்குகளின் கழிவுகள் வாங்கி தோட்டங்களுக்கு உரங்களாக பயன்படுத்துகின்றனர். இதனால் நமது விவசாயிகள் கால்நடைகளின் கழிவுகளையும், கோழிகளின் கழிவுகளையும் தனியாக சேகரித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
கேரள விவசாயிகள் கடைகளில் விற்கப்படும் இயற்கை உரங்களை தவிர்த்து தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதையே அதிகம் விரும்புகிறார்கள். மேலும் விவசாயிகள் சேமித்து வைத்துள்ள இடத்திற்கே வந்து, தங்களது வாகனங்களில் எடுத்துச் செல்வதால் போக்குவரத்து செலவு குறைகிறது. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு உபரியாக கிடைக்கும் வருமானத்தினை ஆடு, மாடு, கோழிகளின் பராமரிப்பிற்கே செலவு செய்வதாக தெரிவித்தனர்.