Blogs

Thursday, 12 December 2019 05:28 PM , by: Anitha Jegadeesan

வேளாண் தொழிலில் களைச்செடிகளை கட்டுப்படுத்துவது சற்று சவாலான செயலாகவே உள்ளது. பாரம்பரிய முறையில் பார்த்தீனிய செடிகளை அழிப்பதற்கான வழிகளை தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் கூறியுள்ளது.

வேளாண் பல்கலை அங்கக வேளாண் துறை தலைவர் பேராசிரியர் கூறும் போது, இந்த ஆண்டு நல்ல  மழைப்பொழிவு இருந்ததினால் புறம்போக்கு பகுதிகளில் எல்லாம் அதிகளவில் களைச்செடிகள் முளைத்துள்ளன. இவற்றில் அதிக பாதிப்பு ஏற்படுத்துவது பார்த்தீனியம் என்கிற செடியாகும். ஓராண்டில் சுமார் ஒரு லட்சம் எண்ணிக்கையிலான விதையை பரப்பும் தன்மை கொண்டது. இதை அழிப்பதற்கு பல ஆராய்ச்சிகால் நடந்து வருகிறது. எனினும் விவசாயிகள் பாரம்பரிய தொழில்நுட்ப நடைமுறையை பின்பற்றி கட்டுப் படுத்தி வருகிறார்கள். 

தயாரிக்கும் முறை

ஐந்து லிட்டர் கோமியம்,
கடுக்காய்,
வெண்மை நிற காதி சோப்பு,
கல் உப்பு,
எலுமிச்சம்பழம்

மேலே குறிப்பிட்டவற்றை நன்றாக கரைத்து அவற்றை பார்த்தீனிய செடிகளின் அடி முதல் நுனி வரை  அடித்தால் சில நாட்களில் காய்ந்து மடிந்து விடும். அதன் பின் அவற்றை கம்ப்போஸ்ட் உரத் தயாரிப்புக்கு மாற்றி மக்கச்செய்து உரமாக பயன்படுத்தலாம். பெரும்பாலான விவசாயிகள் இன்றளவும் இதனை பயன்படுத்தி வருகிறார்கள்.

நன்றி: அக்ரி டாக்டர்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)