கல்வி, திருமணம் போன்ற செலவுகளுக்காகவோ, விலையுயர்ந்த பொருட்களை வாங்கவோ அல்லது மற்ற தேவைகளுக்கோ பெரும்பாலானோர் கடன் வாங்க விரும்புவார்கள். சிலர் கடனை அடைக்கவே இன்னொரு இடத்தில் கடன் வாங்குகின்றனர். வங்கிகளில் கடன் வாங்குவது எளிதான ஒன்றுதான். தேவையான ஆவணங்கள் சரியாக இருந்தால் ஒரே நாளில்கூட கடன் கிடைத்துவிடும்.
ஆனால் இப்போது நீங்கள் கடன் வாங்க வங்கிக்குக் கூட அலையத் தேவையில்லை.
மொபைல் ஆப் மூலமாகவே லோன் வாங்க முடியும். இதற்காக நிறைய மொபைல் ஆப்கள் இப்போது வந்துவிட்டன. பிரச்சினை என்னவென்றால், இந்த மொபைல் ஆப்கள் உண்மையில் அதிகாரப்பூர்வமானதுதானா என்பதில் சந்தேகம் இருக்கிறது.
ஆன்லைன் கடன் (Online Loan)
பண நெருக்கடியில் இது மாதிரியான மொபைல் ஆப்களில் கடன் வாங்க முயற்சித்து, இருக்கும் பணத்தைத் தொலைத்தவர்களும் உண்டு. இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. தனிநபர் தகவல் திருட்டு இதன் மூலமாக அதிகமாக நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. வங்கிகள் தரப்பிலிருந்தும் வாடிக்கையாளர்களுக்கு இது தொடர்பாகத் தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை இந்த விஷயத்தில் விழிப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை செய்துள்ளது.
எச்சரிக்கை (Warning)
இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், வங்கி அல்லது நிதி நிறுவனத்திடமிருந்து கடன் வழங்குவதாக அனுப்பப்படும் போலியான லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் எனவும், இது தொடர்பான பிரச்சினைகளுக்கு சைபர் கிரைமில் புகார் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
போலியான மொபைல் ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டாம்; தவறான லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என ஆறு விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களை எச்சரிக்கை செய்துள்ளது.
ஸ்டேட் பேங்க் இந்தியா தொடர்பான தகவல்களுக்கு https://bank.sbi என்ற வெப்சைட்டில் சென்று பார்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில், போலியான வெப்சைட்கள் தற்போது நிறைய வந்துள்ளன. அதைப் பற்றி தெரியாமல் வாடிக்கையாளர்கள் ஏமாந்து விடுகின்றனர்.
மேலும் படிக்க
கனரா வங்கியின் சூப்பரான மொபைல் ஆப்: விரல் நுனியில் வங்கிச் சேவை!
Fixed Deposit வட்டி அதிகரிப்பு: சீனியர் சிட்டிசன்களுக்கு குட் நியூஸ்!