தீபாவளி தினத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் திரைக்கு வந்ததையொட்டி, சிறப்பு சலுகையாக திருச்சியை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர் தனது ஓட்டலில் ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்தார்.
அண்ணாத்த ரிலீஸ்
தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுத்தால், அது நமக்கு நல்லப் பலன்களைத் தரும் என்பார்கள். இதைப்போல, ரஜினியின் புதியப் படமான அண்ணாத்த ரிலீஸ் ஆனதையொட்டி, திருச்சியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.
ரஜினி ரசிகர்களை மகிழ்விப்பதுடன், தங்கள் வியாபாரத்தையும் சூடு பிடிக்கச் செய்யத் திட்டமிட்ட ரஜினி ரசிகரான இந்த ஹோட்டல் உரிமையாளர், அண்ணாத்த படம் ரிலீஸை முன்னிட்டு ஓர் விளம்பரம் செய்திருந்தார்.
ஒரு ரூபாய்க்கு தோசை (Dosa for one rupee)
என்னவென்றால், தீபாவளியான நவம்பர் 4ம் தேதி அன்று, ஒரு ரூபாய்க்கு தோசை விற்பனை செய்வது என்பதுதான் அது. இதன் அறிவிப்பைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஒரு ரூபாய் தோசை சாப்பிடுவதற்காகக் குவிந்தனர்.
சிலர் தோசை சாப்பிட்டுவிட்டு அண்ணாத் படம் பார்க்கச் சென்றனர். வேறு சிலர் படம் பார்த்துவிட்டு வந்து, தோசை சாப்பிட்டனர்.
தீபாவளிஅன்று ஹோட்டல் விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் அண்ணாத்த ஸ்பெஷலாக ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை விற்பனை செய்து வருவதாக அந்த ரஜினி ரசிகர் கூறினார்.
மேலும் படிக்க...
பட்டாசுக்கு பலியான தந்தை- மகன்- இருசக்கர வாகனத்தில் விபத்து!
வெளிநாட்டில் வெங்காயப் பண்ணையில் வேலை - மாதம் ரூ.1 லட்சம் ரூபாய் சம்பளம்!