பாதுகாப்பான மற்றும் உறுதியான வருவாயை வழங்கும் பல முதலீட்டு திட்டங்களை இந்திய தபால் அலுவலகம் வழங்கி வருவதில், ‘பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்’ பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
அஞ்சலக திட்டம் (Postal Scheme)
வாழ்வின் பிற்பகுதிக்காகவும், நமது குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் தற்போதைய நமது வருமானத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் பலரும் நிச்சயமற்ற தன்மை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு அச்சம் கொள்கின்றனர். பாதுகாப்பாக முதலீடு செய்யும் வகையில் நாட்டின் அஞ்சல் துறை பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
அதுபோன்ற திட்டம் தான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். முக்கியமாக இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பெறும் தொகைக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 15 ஆண்டுகால முதிர்வு திட்டமாக உள்ள PPF ல் பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கேற்ப முதிர்வு காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். 7.1 சதவீத கூட்டு வட்டி விகிதம் அளிக்கப்படுவதால் தினசரி ரூ.417 அல்லது மாதம் ரூ.12,500 அல்லது ஆண்டிற்கு ஒருமுறை ரூ.1.50 லட்சத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
இந்த தொகை 15 ஆண்டுகால முடிவில் ரூ. 22.50 லட்சமாக மாறியும், வட்டியானது ரூ.18.18 லட்சமாகவும் இருக்கும். இதனால், பயனர்கள் மொத்தமாக ரூ.40.68 லட்சம் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
EPFO வாடிக்கையாளர்களுக்கு விரைவில் 8.1% வட்டி: முக்கிய தகவல் வெளியீடு!
Post Office: தினசரி 417 ரூபாய் முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் வருமானம்!