இயற்கை வேளாண்மை, சிறு தானிய உணவு முறை போன்ற காரணங்களினால் இதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. சந்தையில் நல்ல விலையும் கிடைப்பதால் இன்று அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் சிறுதானிய உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாயிகள் கேழ்வரகு, கம்பு போன்ற பல்வேறு சிறுதானிய பயிர்களை ஆர்வமுடன் பயிர் செய்து வருகின்றனர். மாறிவரும் மக்களின் மனநிலையும், சந்தை சூழ்நிலையும், சிறுதானியம் குறித்த விழிப்புணர்வும் சிறுதானிய விவசாயிகளுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தையில் கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, குதிரைவாலி மற்றும் மாப்பிளை சம்பா உள்ளிட்ட சிறுதானிய வகைகளுக்கு, சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சாகுபடி செலவு மற்ற பயிர்களைக் காட்டிலும் குறைவாக சிறுதானியங்களுக்கு தேவைப்படும். உரம், பூச்சி மருந்து போன்றவையும் மிக குறைந்தளவே தேவைபடும். மிகக் குறைந்த நீர்பாசனம் போதுமானது. மேலும் சிறுதானிய விவசாயிகளுக்கு அரசும், வேளாண் துறையும் உதவிகளையும், மானியங்களையும் தருவதால் சமீப காலமாக அதிக நிலப்பரப்பில் சிறுதானிய வகைகள் பயிரிட பட்டு வருகின்றன.