திருப்பூர் மாவட்டம், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், மானாவாரியாக கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, விதைப்பு முடிந்தததும் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழையால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப் பட்டுள்ளது. களைச்செடிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி விட்டதால், களையெடுத்தல் பணிக்கு அதிக அளவில் செலவிட வேண்டி உள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே மானாவாரி நிலங்களில், கொத்தமல்லி சாகுபடி செய்யப் படுகிறது. ஒரு ஏக்கருக்கு, 300 கிலோ முதல் 325 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நடப்பாண்டில் மகசூல் குறைய வாய்ப்பிருப்பதால் நல்ல விலை கிடைக்க வேளாண் விற்பனை வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.