தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் ஆகியவற்றுக்கு, 'இ - வே பில்'லை கட்டாயமாக்குவது குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் ஆலோசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமான மதிப்பு கொண்ட தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களை, மாநிலங்களுக்குள் கொண்டு செல்ல, இ - வே பில்லை கட்டாயமாக்குவது என, மாநில நிதியமைச்சர்களைக் கொண்ட குழு பரிந்துரை வழங்கி உள்ளது.
இ- வே பில் (E-Way bill)
இரு வணிகங்களுக்கு இடையேயான பரிமாற்றத்துக்கு, 'இ - இன்வாய்ஸிங்' கட்டாயம் என அறிவிப்பது குறித்தும், பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி., கவுன்சில் மீட்டிங், வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், அமைச்சர்கள் குழுவின் தங்கத்துக்கான இ - வே பில் உள்ளிட்ட பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மேலும், தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களை மாநிலங்களுக்குள் கொண்டு செல்வதற்கு, இ - வே பில்லை கட்டாயமாக்குவது குறித்து, மாநிலங்கள் முடிவு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
பெரும்பாலான தங்கம் வாங்குவோர் இன்னும் தங்களிடம் உள்ள உலோகம் அனைத்தையும் தங்க நகைகளாக வாங்க விரும்புகிறார்கள். எனவே, தங்க நகைகளை வாங்கி முதலீடு செய்யலாம்.
பங்குகளைப் போலவே தங்க ஈடிஎஃப்களிலும் மக்கள் டிமேட் கணக்கு மூலம் வர்த்தகம் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. சுமார் 1 கிராம் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அதோடு, ஈடிஎஃப்களில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் வர்த்தகக் கணக்கு இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.
மேலும் படிக்க