பிரிட்டிஷ் எலக்ட்ரிக் பைக் நிறுவனமான, ‘கோ ஜீரோ மொபிலிட்டி’ இந்தியாவில், ‘ஸ்கெலிக் லைட் இ – பைக்’ எனும் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை, 19 ஆயிரத்து 999 ரூபாய். இந்த சைக்கிள் மின்சாரத்தில் செயல்படுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மின்சார சைக்கிள்
நகர போக்குவரத்துக்கு மிகவும் ஏற்ற, இந்த மின்சார சைக்கிள் (Electric Cycle) ஒரு முறை ‘சார்ஜ்’ ஏற்றினால், 25 கிலோமீட்டர் துாரம் வரை செல்லலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக, மணிக்கு 25 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். இதில், கழற்றிக்கொள்ளும் வகையிலான, 210 வாட் ஹவர் லித்தியம் பேட்டரியும் (Lithium Battery), 250 வாட் ரியர் ஹப் டிரைவ் மோட்டாரும் (Drive Motor) உள்ளன. கூடவே, எல்.இ.டி., டிஸ்பிளே வசதியும் உள்ளது.
முன்பதிவு
ஒரு முறை இந்த பேட்டரியை சார்ஜ் ஏற்ற, இரண்டரை மணி நேரம் பிடிக்கும். ஸ்கெலிக் லைட் தவிர, மேலும் இரண்டு மாடல்களும் உள்ளன. ஸ்கெலிக் லைட் வாகனத்தை 2,999 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அங்கிட் குமார் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே எலக்ட்ரிக் பைக் அறிமுகமாயுள்ள நிலையில், தற்போது எலக்ட்ரிக் சைக்கிளின் வருகை அனைவரிடையே எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்! ரூ. 20,000 தள்ளுபடி!
இந்தியாவில் எக்ட்ரிக் பஸ்ஸை இயக்க சென்னை உள்பட 9 நகரங்கள் தேர்வு!