இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில், அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் பணிபுரிய ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அங்காளம்மன் திருக்கோயில்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டத்தில் உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கோயிலில், அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் பணியாற்ற மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர் ஆகியோருக்கான பணியிட நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மருத்துவ அலுவலர் (Medical Officer)
மொத்த காலியிடங்கள் : 2
கல்வித் தகுதி (Education Qualification)
MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி (Age)
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 60,000
செவிலியர் (Staff Nurse)
மொத்த காலியிடங்கள்
2
கல்வித் தகுதி (Education Qualification)
DGNM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி (Age)
35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 14,000
மருத்துவ பணியாளர் (Hospital Worker)
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை
2
கல்வித் தகுதி (Education Qualification)
8 ஆம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது(Age)
40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
ரூ. 6,000
தேர்வு செய்யப்படும் முறை (Selection Process)
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to apply)
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
https://drive.google.com/file/d/1L59onIg0PatVCBu7S2HdEPsa0O3k9JYL/view
என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி (Address)
உதவி ஆணையர்/செயல் அலுவலர்
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்,
மேல்மலையனூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம் – 604204.
விண்ணப்பிக்கக் கடைசி தேதி (Deadline)
22.11.2021
விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.
மேலும் படிக்க...
விதை உற்பத்தியில் பிற ரக கலப்பினை தவிர்ப்பது எப்படி?
விவசாயிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல்- அரசு அதிரடி முடிவு!