Blogs

Tuesday, 21 September 2021 08:01 AM , by: Elavarse Sivakumar

Credit : Dailythanthi

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்துக் கழகம் (Transport Corporation)

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பட்டதாரி மற்றும் டிப்ளமோ பயிற்சி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணியிடங்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கோயம்புத்தூர், கும்பகோணம், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் ஆகிய மண்டலங்களில் நிரப்பட உள்ளன.

காலிப்பணியிடங்கள் (Vacancies)

மொத்தம் 234 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு பொறியியல் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பட்டதாரி பயிற்சி (Graduate Apprentices)

காலியிடங்கள்

92

மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் : 88, சிவில் : 4

கல்வித் தகுதி (Educational Qualification)


சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


பயிற்சி கால ஊதியம் (Training period pay)

 ரூ.4984

பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)

காலியிடங்கள் 

142 (மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் : 138, சிவில் : 4)

கல்வித் தகுதி (Educational Qualification)

சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சி கால ஊதியம் (Training period pay)

 ரூ.3582

பயிற்சி கால அளவு (Duration of training)

1 வருடம்

தேர்வு செய்யப்படும் முறை (Method of selection)

டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டிற்கு பயிற்சி அளிக்கப்படும்.

காலக்கெடு

25.09.2021

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதலில் HYPERLINK "http://www.mhrdnats.gov.in/"www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.

அதன்பின்னர் BOARD OF APPRENTICESHIP TRAINING (SOUTHERN REGION) என்பதை தெரிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2021/09/TNSTC-CBE_KUM_TNV_NGL_Notification_2021-22-1.pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

மேலும் படிக்க...

தங்கச்சங்கிலியைத் தலை முடியாக மாற்றியப் பாடகர்!

வீட்டில் இருந்தே மாதம் ரூ.60,000 சம்பாதிக்கலாம்- SBI யின் அரிய வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)