நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 January, 2022 10:33 AM IST
EPFO customers: How to avoid cash loss?

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். EPFO தனது உறுப்பினர்கள், பண இழப்புகளை தவிர்ப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை அளித்து உள்ளது. இந்த வழிமுறைகளை பின்பற்றினால் மோசடி கும்பலிடம் இருந்து தங்களுடைய பணத்தை பாதுகாத்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு (Important Announcement)

இந்நிலையில் மோசடி கும்பல்களிடம் இருந்து தங்கள் பணத்தை எப்படி பாதுகாப்பது பற்றிய தகவலை, தற்போது EPFO தனது உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் செய்துள்ளது. முதலில் EPFO விவரங்களை சமூக ஊடங்களில் அல்லது OTP மூலம் தொலைபேசியில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும் EPFO தனது உறுப்பினர்களை ஆதார் எண், பான் எண், வங்கி கணக்கு அல்லது OTP போன்ற தனிப்பட்ட விவரங்களை செல்போன் மூலம் கேட்காது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த மாதிரியான போலியான அழைப்புகள் வந்தால் தங்கள் சுய விவரங்களை சொல்ல கூடாது என்றும் கூறியுள்ளது. EPFO உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்களை ஆன்லைனில் எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும் என EPFO வலியுறுத்தியுள்ளது.

டிஜிலாக்கர் (DigiLocker)

இதற்காக உறுப்பினர்கள் DigiLocker இல் கிடைக்கும் சில EPFO சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. DigiLocker என்பது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் சேமிப்பதற்கும் பகிர்வதற்கும் சரிபார்ப்பதற்கும் பாதுகாப்பான கிளவுட் அடிப்படையிலான தளமாகும்.இந்த ஆப் யில் கிடைக்கும் EPFO சேவைகள் UAN அட்டை ,ஓய்வூதியம் செலுத்தும் ஆணை (PPO), திட்டச் சான்றிதழ் ஆகும். தற்போது இந்த சேவைகளை பெற டிஜிலாக்கரில் பதிவு செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

முக்கிய அப்டேட்: இனி பிஎஃப் அக்கவுண்டில் நீங்களே இதை செய்து கொள்ளலாம்!

இணைய வழி மோசடிகள் அதிகரித்து வருகிறது: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!

English Summary: EPFO Customers: How to Avoid Cash Loss? (1)
Published on: 31 January 2022, 10:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now