இபிஎப் மற்றும் இபிஎஸ் உறுப்பினர்கள் தங்களின் மாத ஊதியம் மற்றும் பணிக்காலம் போன்றவற்றை பொறுத்து தங்களின் ஓய்வூதியத்தை பெறுவார்கள். உச்ச நீதிமன்றம் மாத ஓய்வுதியத்திற்கான உச்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. பணிபுரியும் ஊழியர்கள் இபிஎப் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்படும் நேரத்திலேயே, இபிஎஸ் அமைப்பிலும் உறுப்பினராக சேர்க்கப்படுகிறார். இபிஎப் உறுப்பினர்கள் தாங்கள் பெறும் மாத ஊதியத்தில் இருந்து 12 % ஓய்வூதியத்திற்காக வழங்குகின்றனர். அரசின் விதிமுறையின் படி, பணி வழங்கிய நிறுவனமும் அந்த ஊழியருக்கு மாத சம்பளத்துடன் 12% தொகையை ஓய்வூதியத்திற்காக ஒதுக்க வேண்டும்.
சம்பளம் (Salary)
இதில் குறிப்பிடும் படியாக மொத்த தொகையில் 8.33% இபிஎஸ் க்கு ஒதுக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு ஊழியர் பெறும் சம்பளம் என்ன தொகையாக இருந்தாலும் அதிகபட்சமாக ரூ.15,000 என்று தான் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அதிகபட்ச உச்சவரம்பை நீக்குவது குறித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்திய யூனியன் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் ஓய்வூதியத்தை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என்று ஆகஸ்ட் 12ம் தேதி வழங்கப்பட்ட மனுவின் விசாரணை நடந்து வருகிறது.
ஊழியரின் அதிகபட்ச சம்பளம் ரூ.15,000 ஆக கணக்கிடப்படுவதால் இபிஎஸ் திட்டத்தின் மூலம் அவர்கள் பெறும் ஓய்வூதியம் மாதம் அதிகபட்சமாக ரூ.7,500 ஆக தான் இருக்கும்.
ஒருவரின் ஓய்வூதியமானது,
‘மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x வருடங்கள் இபிஎஸ் )/70’ என்ற கணக்கீட்டின் மூலம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
மேலும், ஊழியர் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பணி புரிந்து இருந்தால் அவை ஒரு முழு ஆண்டாக கணக்கிடப்படும். ஆனால் 5 மாதங்கள் அல்லது அதற்கு குறைவான மாதங்கள் பணிபுரிந்து இருந்தால் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஒரு ஊழியர் பெறும் அதிகபட்ச ஓய்வூதியமானது ரூ.7500 ஆகவும், குறைந்தபட்ச ஓய்வூதியமானது ரூ.1000 என்றும் உள்ளது.
மேலும் படிக்க
ஆதார் உடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: வெளியாகவிருக்கும் புதிய அறிவிப்பு!
எதற்கெல்லாம் பயன்படுகிறது இந்த ஆதார் கார்டு: தெரிந்து கொள்ளுங்கள்!