ஈரோடு மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசன மானியத்தை உயர்த்தும் படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு சமீபத்தில் கரும்புக்கு மட்டும் மானியத்தை உயர்த்தி உள்ள நிலையில் மற்ற பயிர்களுக்கும் உயர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் சொட்டு நீர் பாசன வசதி அமைக்க வழங்கப்படும் மானிய தொகையை அரசு உயர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரும்பு, வாழை, தென்னை, மரவள்ளி போன்ற பல்வேறு வகையான பயிர்களுக்கு வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் சொட்டு நீர் பாசன வசதி அமைக்க மானியம் நிர்ணியக்கப் பட்டன. எனவே தற்போது உள்ள விலைவாசி உயர்வினை கருத்தில் கொண்டு மானியத்தை உயர்த்த விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
மானிய தொகையை நில அளவை கொண்டு அரசு நிர்ணயத்துள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழ்நிலையில் ஒரு எக்டர் நிலத்திற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ரூ.50 ஆயிரத்திற்கு மேல் செலவு ஏற்படுவதால் அரசு மானியத்தொகையை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran