பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 December, 2019 3:07 PM IST

நாட்டுக் கோழி வளர்பவருக்கும், வளர்க்கும் ஆர்வமுள்ள அனைவருக்கும் தஞ்சாவூர் கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகம் பயிற்சி முகாம் ஒன்றை வருகிற 10ம் தேதி நடத்த உள்ளது. இதில் நாட்டுக் கோழி வளர்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சி முகாமில் பங்கு பெற விரும்பும் அனைவரும் மையத்தை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம்.

நாட்டுக் கோழி வளர்ப்பு என்பது லாபம் தரும் தொழிலாகும். இன்றைய சூழலில் விவசாயிகள் மட்டுமல்லாது அனைவரும் உபதொழில் ஒன்று அவசியமாகிறது. இத்தொழிலை விவசாயிகள், வியாபாரிகள், தனியார் நிறுவனங்கள், குடும்ப தலைவிகள்உள்ளிட்ட அனைவரும் இதில் ஈடுபட்டு கூடுதல் வருமானம் பெறலாம்.

குறைந்த முதலீட்டில், குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம். நாட்டுக் கோழி வளர்ப்புக்கு குறைந்த இட வசதி  மற்றும் குறைந்த தண்ணீர் வசதி போதுமானது. வீடுகளிலே  சிறிய அளவில் குடில் போன்று அமைத்து கோழிகளை வளர்க்கலாம். நாட்டுக் கோழிகளுக்கான சந்தை மிகப் பெரியது. இதற்கான தேவையும் அதிகமிருப்பதால் தாராளமாக இத்தொழிலை தொடங்கலாம்.  பிராய்லர் கோழிகள் போல் இல்லாமல் நோய் தொற்றுகளை எதிர்த்து வளரும் தன்மை கொண்டது.

பயிற்சி முகாம் விபரம்

பயிற்சியானது தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் வரும் டிசம்பர் 10ம் தேதி ( செவ்வாய் கிழமை) காலை 10 மணி முதல் நடை பெறவுள்ளது. 

பயிற்சியில் பங்கேற்கும் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றை கைவசம் வைத்துக் கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு 87547 48488, 04362-264665 என்ற எண்ணை  தொடர்பு கொள்ளலாம்.

English Summary: Ethno Veterinary Herbal Research and Training Unit for Livestock Health Care Organized Camp for Public
Published on: 08 December 2019, 11:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now