விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸில் எறும்பு ஏறியிருப்பது தெரியவந்தததால், ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தையே மாற்றிய சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.
டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணிக்கும் ஏர் இந்தியா விமான நிலையம் ஒன்று புறப்பட தயாரானது. இதையடுத்து, விமானத்தில் அனைவரும் ஏறினார்கள். விமானம் புறப்படுவதற்கு முன்னதாக, விமானத்தின் கேப்டன் சிறு பிரச்சனை காரணமாகி விமானம் புறப்பட தாமதமாகும் என அறிவித்தார்.
வெளியேற உத்தரவு (Order to leave)
பயணிகள் அனைவரும் குழப்பம் அடைந்த நிலையில், திடீரென அடுத்த அறிவிப்பை வெளியிட்டார் கேப்டன். அதில் பயணிகள் அனைவரும், தங்கள் லக்கேஜை (Luggage) எடுத்துக்கொண்டு விமானத்திலிருந்து வெளியேறும்படியும், பயணிக்கு லண்டன் செல்ல வேறு விமானம் வரும் எனவும் தெரிவித்தார்.
இதை கேட்டதும் பதறிய பயணிகள் ஏர் இந்தியா நிறுவனத்திடம் இதற்கான காரணத்தைக் கேட்டனர். இந்த நிறுவனம் அளித்தக் காரணம் பயணிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இளவரசர் பயணம் (The prince travels)
அது என்னவென்றால், குறிப்பிட்ட அந்த விமானத்தில் பிஸ்னஸ் கிளாஸில் பூட்டான் நாட்டின் இளைஞர் ஜிக்மி நம்கியேல் வாங்க்சுக், பயணிக்கவிருந்தார்.
இவர் அந்நாட்டின் மன்னர் ஜிக்மி கேசர் நம்கியேல் வாங்க்சுக்கின் மகன் என்பது தெரியவந்தநிலையில், தற்போது பிஸ்னஸ் கிளாஸ் பிரிவில், எறும்புகள் புகுந்துவிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே விமானத்தை மாற்ற உள்ளதால், பயணிகள் விமானத்தை விட்டு இறங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அடக் கடவுளே
இதைக் கேட்ட பயணிகள் ஒரு மன்னரின் மகனுக்காக விமானத்தையே மாற்றும், ஏர் இந்தியா நிறுவனத்தின் முடிவைக் கடுமையாக விமர்சித்தனர்.
அடக் கடவுளே இப்படிக்கூட நடக்குமா எனவும் வியப்பில் ஆழ்ந்தனர்.
மேலும் படிக்க...
செல்போனை விழுங்கிய சம்பவம்-அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்!
இந்தப் படிப்பில் சேர்ந்தால் லேப்- டாப் இலவசம்- மாணவர்கள் கவனத்திற்கு!