பொதுவாகக் கண்காட்சி என்பது வியப்பூட்டும் வகையில் அமைந்திருக்கும். அதேநேரத்தில் வித்தியாசமான மிரளவைக்கும் கண்காட்சிகளுக்கும் அமோக வரவேற்பு கிடைக்கத் தான் செய்கிறது.
அதாவது திகிலூட்டும் அனுபவங்களைப் பெறவேண்டும் என சிந்திப்பவரா நீங்கள்.அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.
பாதுகாக்கப்பட்ட சடலங்கள் (Preserved corpses)
ஜெர்மனியைச் சேர்ந்த உடற்கூறியல் (anatomist) நிபுணரான குந்தர் வான் ஹேகன்ஸ், முற்றிலும் வித்தியாசமான முயற்சியாக, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில், சடலங்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாதுகாக்கப்பட்ட சடலங்களையும் மனித உறுப்புகளையும் அவர் காட்சிப்படுத்தியிருந்தார்.
நிகழ்வுகளை நினைவூட்டும் (Reminiscent of events)
இந்தக் கண்காட்சியில் பல சடலங்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும், அவை ஒவ்வொன்றும், ஒரு நிகழ்வை நினைவூட்டியது ஸ்வாரஸ்யம். உதாரணமாக, எலும்புக்கூடு கால்பந்து விளையாடுவது, நடமாடும் எலும்புக்கூடு (மைக்கேல் ஜாக்சனை நினைவூட்டுதல்) இப்படி இன்னும் பல விஷயங்களை அடையாளம் காட்டின.
விமர்சனங்கள் (Reviews)
ஆனால் இந்த கண்காட்சிக்குப் பல தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கண்காட்சிக்கு எதிராக ஒரு கையெழுத்து போராட்டமும் தொடங்கப்பட்டுள்ளது, இது "ஒரு நபரின் நெறிமுறை, தார்மீக மற்றும் ஆன்மீக பக்கத்தை அழிக்கிறது, சமுதாயத்தையும் அரசையும் தாழ்த்துகிறது" என்று கூறும் மனுவில் 900-க்கும் மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
ஏற்பட்டாளர் விருப்பம் (Occurrence Option)
ஆனால், எது எப்படியோ, கண்காட்சி ஏற்பாட்டாளர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒதுக்கித் தள்ளுகிறார். அனைத்து சடலங்களும் நன்கொடையாளர்களின் முழுமையான புரிதலோடு பெறப்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் மரணத்திற்கு பின்னர், தனது உடலும் இதேபோல் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்ற மன விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க...
ஒரு கப் தேநீர் 1,000 ரூபாய் - இங்கில்லை, கொல்கத்தாவில்!
நல்ல வருமானத்தோடு பணத்திற்கு பாதுகாப்பு அளிப்பது இந்தத் திட்டம் தான்!