ஒரே ஒரு நாணயம், ஒன்றல்ல, இரண்டல்ல, 2000 ஆண்டுகள் பழைய வாய்ந்த நாணயம். இது இந்திய ரூபாய் மத்திப்பில் 15 கோடி ரூபாய்க்கு விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைசிறந்த நாடக ஆசிரியர் ஷேக்ஸிபியர் எழுதிய அரிய நாவல்களில் ஒன்றான ஜூலியஸ் சீசரின் வரலாறு உலகப் புகழ்பெற்றது. ஆங்கில இலக்கியப் பாடத்தில், இதனைப் படிக்காத பட்டதாரிகள் இருக்கவே இயலாது.
அத்தகையச் சிறப்பு பெற்ற ரோமானியப் பேரரசர் ஜூலியஸ் சீசரின் மரணத்தை கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்ட அரிய நாணயம் வரும் மே மாதம் சுவிச்சர்லாந்தில் ஏலத்துக்கு விற்பனையாகவிருக்கிறது. இந்த நாணயம் சுமார் 2 மில்லியன் டாலருக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதாவது 2 மில்லியன் டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 15 கோடி ரூபாய்க்கு மேல்.
எய்ட் மார் என பெயரிடப்பட்டுள்ள இந்த அரிய நாணயம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. ஜூலியஸ் சீசரை கொலை செய்த புரூட்டஸால் இந்த நாணயம் உருவாக்கப்பட்டது.
இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் புரூட்டஸின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு முன் 44ஆவது ஆண்டு மார்ச் 15ஆம் தேதி ஜூலியஸ் சீசர் கொல்லப்பட்ட பிறகு இந்த நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நாணயங்கள் பிற்கலத்தில் உருக்கப்பட்டுவிட்டன. எனினும், தற்போது இதில் மூன்று நாணயங்கள் மட்டும் எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு நாணயம் லண்டனில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு 3.5 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டது.
மற்றொரு நாணயமான எய்ட் மார் கடந்த 10 ஆண்டுகளாக பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இருந்தது. இந்நிலையில் இந்த நாணயம் வரும் மே மாதம் சுவிச்சர்லாந்தில் சூரிச் நகரில் உள்ள பவுர் அவ் லாக் ஹோட்டலில் ஏலத்துக்கு விடப்படவிருக்கிறது.இந்த நாணயம் சுமார் 2 மில்லியன் டாலர் அல்லது அதற்கு மேல் விற்பனையாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க...
தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!
ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!