ஊட்டியில் அமைந்து இருக்கும் இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையம் சார்பில், முதல் முறையாக மலைப்பகுதிகளுக்கு ஏற்ற மண் வள பாதுகாப்பு மற்றும் கால்நடைகளுக்கு ஏற்ற தீவன பயிர்களின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் பயிற்சி துவங்கியது.
மண் அரிப்பையும், தீவன தேவையும் பூர்த்தி செய்யும் விதத்தில் கம்பு, நேப்பியர் போன்ற வகை புற்கள் செயல் படுகிறது என பயிர் சாகுபடி பயிற்சியில் மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய தலைவர் தெரிவித்தார்.
தலைநகரில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரியல் தொழில் நுட்பத் துறையின் நிதியுதவியுடன் செயல்பட்டு வரும் இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவன ஆராய்ச்சி மையம் சார்பில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முகாமில் சாண்டிநல்லா ஆடு இனவிருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் அனில்குமார் கலந்து கொண்டார். வளர்ந்து வரும் இயற்கை வேளாண்மை, குறைந்து வரும் கால்நடைகளின் எண்ணிக்கை இவை அனைத்திற்கும் தீர்வு கால்நடை வளர்ப்பது என தெரிவித்தார்.
நீலகிரியில் விவசாயிகள் கம்பு, நேப்பியர் போன்ற புதிய புல் வகைகளை பயன்படுத்தி மண் அரிப்பை தடுத்து மேலும் பசுந்தீவன தேவைகளையும் பூர்த்தி செய்யும் படி அறிவுறுத்தினார். இவ்வாறு செய்வதினால் அடர் தீவனத்திற்கான செலவு கணிசமாக குறையும் எனவும், பால் உற்பத்தி அதிகரிக்கும் எனவும் கூறினார்.