Blogs

Sunday, 10 January 2021 09:10 PM , by: KJ Staff

Credit : Zee News

சரியான திட்டமிடல் மற்றும் நிலையான முதலீட்டுப் பழக்கத்தின் மூலம் ஒரு கோடி ரூபாயை எளிதாகச் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம். 1 கோடி ரூபாயை சம்பாதிக்கக் கனவு கொண்டு அனைவரும் தங்களது வாழ்நாளில் இளம் பருவத்திலேயே முதலீடு (Investment) செய்யத் துவங்கினால் விரைவாகக் கனவு இலக்கை எளிதாக அடைய முடியும். மேலும் ஒவ்வொரு மாதமும் நீங்கள் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இரு முக்கியக் காரணிகள்

முதலீட்டு அளவும், முதலீட்டில் மூலம் கிடைக்கும் வருமானம் (Income) ஆகிய இரு காரணிகள் தான் எவ்வளவு சீக்கிரம் கோடி ரூபாயை சம்பாதிக்க முடியும் என்பதை நிர்ணயம் செய்யும். எனவே உங்கள் மாத வருமானத்தைச் சரியான முறையில் திட்டமிட்டு, எவ்வளவு தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்யுங்கள்.

8 சதவீத லாபம்

இந்த வகையில் தற்போது பிபிஎப் (PPF) போன்ற அரசுத் திட்டங்களில் கிடைக்கும் 8 சதவீத வட்டியில் லாபம் அளிக்கும் திட்டம் மூலம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால், 10 வருடத்திற்கு 54,661 ரூபாயும், 20 வருடத்திற்கு 16,977 ரூபாயும், 30 வருடத்தில் 6,710 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

10 சதவீத லாபம்

10 சதவீத வட்டியில் லாபம் அளிக்கும் திட்டம் மூலம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால், 10 வருடத்திற்கு 48,817 ரூபாயும், 20 வருடத்திற்கு 13,167 ரூபாயும், 30 வருடத்தில் 4,424 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

14 சதவீத லாபம்

14 சதவீத வட்டியில் லாபம் அளிக்கும் திட்டம் மூலம் 1 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்றால், 10 வருடத்திற்கு 38,600 ரூபாயும், 20 வருடத்திற்கு 7,685 ரூபாயும், 30 வருடத்தில் 1,821 ரூபாயும் முதலீடு செய்ய வேண்டும்.

இந்தியாவில் பணவீக்கம்

இந்தியாவில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 6 சதவீதம் வருடாந்திர பணவீக்க அளவீட்டில் தற்போது உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய 1 கோடி ரூபாய் போதும் என நீங்கள் நினைத்தால் 5 வருடத்திற்கும் பின் அதே தேவைகளுக்கு 1.34 கோடி ரூபாய் தேவை. இதேபோல் 10 வருடத்திற்குப் பின் 1.79 கோடி ரூபாய் தேவை, இதுவரை 20 வருடத்திற்குப் பின் 3.21 கோடி ரூபாய் தேவை. இதையும் மனதில் வைத்துக்கொண்டு உங்கள் முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

ரூ.5000 முதலீட்டில் குழந்தையின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான சிறந்த திட்டம்

வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்தது, SBI வங்கி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)