ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவைடை பணி தீவிரமடைந்துள்ளதால் வரும் நாட்களில் சின்ன வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஈரோடு மாவட்டத்தை அடுத்த அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் 5,000 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி நடை பெற்றது. நன்கு விளைச்சல் அடைந்த நிலையில், அறுவடை பணி தொடங்கியுள்ளது.
சின்னவெங்காயத்தை பொறுத்தவரை எல்லா பகுதிகளிலும் பயிர் செய்ய இயலாது. அதற்கேற்ற சீதோஷண நிலை அவசியம். மிதமான தட்பவெட்ப நிலையும், சற்று ஈரம் கலந்த காற்றும் அவசியமாகும். அந்த வாயில் தமிழகத்தில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் சின்னவெங்காயத்தை சாகுபடி செய்கின்றனர். விதைத்த 60 நாட்களில் பலன் தருவதால் குறுகியகால பணப்பயிராக கூறப் படுகிறது.
தற்போது அறுவடை பணி நடைபெற்று வருவதால் விலை குறைய அதிக வாய்ப்பிருப்பதாக கூறப் படுகிறது ஓரிரு தினங்களில் பண்டிகை வர இருப்பதால் பொது மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது 60 முதல் 80 வரை விற்பனையாகிறது. ரூ.25 முதல் 30 வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்க படுகிறது