கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்கள். மழை இல்லாது வானம் பொய்த்து போகும் சமயங்களில் கால்நடை வளர்ப்பின் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். எனினும் கால்நடைகளுக்கு என்று பிரத்தேகமாக மருத்துவமனை இல்லாதால் அமைத்து தரும் படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் விவசாயம் என்பது அங்குள்ள ஆறு, மழை மற்றும் கிணற்று நீரை நம்பி தான் நடந்து வருகிறது. நீர் ஆதாரங்கள் கைகொடுக்க தவறும் சமயங்களில் மழை தான் மானாவாரி நிலங்களுக்கு கைகொடுக்கிறது. இப்பகுதிகளில் ஆடு வளர்ப்பு மிக முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு மட்டும் 1.25 லட்சம் மேச்சேரி இன ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
பருவநிலை மாற்றத்தினால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நோய் தொற்று காரணமாக ஆடுகள் அடிக்கடி உயிரிழக்கின்றன. எனவே தமிழக அரசு ஆடுகள் ஆராய்ச்சி நிலையத்தை அமைக்க வேண்டும், மேலும் செயல்பாட்டில் உள்ள கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.