மதுரை மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டுமென ஆட்சியரிடம் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், இழப்பீடுகள் ஏதும் நிகழாமல் இருக்க அரசு உடனடியாக நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெரியாறு, வைகை இருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. சென்ற மாத இறுதி முதல் நெல் அறுவடை நடை பெற்று வருகிறது. தற்போது அவை முடியும் தருவாயில் உள்ளதால் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டபட்டது. எனினும் இதுவரை திறக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்றனர்.
விவசாயிகள் ஒரு முட்டைக்கு ரூ.1300 நிர்ணயத்தை நிலையில் இடை தரகர்கள் அவற்றை ரூ 900 வாங்குகின்றனர். இதனால் ஒரு மூட்டைக்கு ரூ.400 வீதம் ஏக்கருக்கு ரூ.15,000 வரை நஷ்டம் ஏற்படுவதாக தெரிவித்தனர். எனவே, ஜனவரி முதல் வாரத்தில் கொள்முதல் மையங்களை திறக்க மதுரை ஆட்சியர் வினய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக் கொண்டனர்.