சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது? மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 1 November, 2019 3:19 PM IST

விதை பரிசோதனை என்பது விதையின் தரங்களான புறத்தூய்மை, ஈர்பபதம், முளைப்புத் திறன் மற்றும் பிற இரக விதைகளின் கலப்பு போன்றவற்றை ஆய்வு செய்து நல்ல தரமான விதைகள் கிடைக்கச் செய்வதே ஆகும். விவசாயிகள் பரிசோதித்த விதைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டுமென விதை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ரபி பருவத்திற்கான நடவு பணி தற்போது நடைபெற்று வருகிறது. விதைப்புப் பணிகளில்  ஈடுபட்டுள்ள விவசாயிகள் உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே விதைகளை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் விதைகளின் விவரத்தை விற்பனை ரசீதில் குறிப்பிடவும் அத்துடன் விவசாயிகளின் கையொப்பம் மற்றும் விற்பனையாளர் கையொப்பம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

விவசாயிகள் விதைகள் வாங்கும் முன் விதையின் ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் மற்றும் பருவம் ஆகியவற்றை அறிந்து  வாங்க வேண்டும். உரிமம் இல்லாமலோ, காலாவதியான விதைகளையோ விற்பனை செய்தாலோ, விற்பனை ரசீது தர மறுத்தாலோ சம்பந்தப்பட்ட மண்டல விதை ஆய்வாளர் மற்றும் விதை ஆய்வு துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.  புகாரின் அடிப்படையில் விதை விற்பனையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran 

English Summary: Farmers are requested to buy tested seeds from registered seed seller: Receipt must be mandatory
Published on: 01 November 2019, 02:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now